Tamil Rasipalan 17 August 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்

Tue, 17 Aug 2021-6:08 am,

மேஷம்: உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மையளிக்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்தவொரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபம்: ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும். ஆவணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

மிதுனம்: தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கலைநயம் மற்றும் கவித்துவமான சிந்தனைகள் மேம்படும். புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

கடகம்: மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.

சிம்மம்: சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கன்னி: தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உங்களின் மீதான நம்பிக்கை வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

துலாம்: உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும்.

விருச்சிகம்: கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். சோம்பேறித்தனத்தால் செயல்பாடுகளில்  காலதாமதங்கள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.

தனுசு: காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விவாதங்களின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும்.

மகரம்: உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். தொழில் கல்வி சார்ந்த பணிகளில் புதுவிதமான எண்ணங்களும், அதற்குண்டான உதவிகளும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும்.

கும்பம்: பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப உயர்வும், அங்கீகாரமும் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

மீனம்: செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link