Road Accidents: நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைப்பதில் தமிழ்நாடு முதலிடம்

Wed, 22 Sep 2021-2:45 pm,

இந்தியாவில், 2015 முதல் 2019 வரை, சாலைகளின் நீளம் 17 சதவிகிதம் அதிகரித்திருந்தாலும், பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் அளவு 41 சதவிகிதம அதிகரித்துள்ளன

நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2019 இல் 41 சதவீதம் அதிகரித்து 29.6 கோடியாக அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 21 கோடியாக இருந்தது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தரவுகள் இந்தத் தகவலை சொல்கின்றன  

சாலை விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்தது. இது 2015 ல் 1,46,113 ல் இருந்து 10 சதவீதம் குறைந்து 2019 ல் 1,31,714 ஆக குறைந்தது.

தரவுகளின்படி, 2015-20 காலத்தில் விபத்துகளைக் குறைப்பதில் தமிழகத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. அதைத் தொடர்ந்து முறையே கேரளா, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

2020 மற்றும் 2030 க்கு இடையில் மொத்த சாலை விபத்து இறப்புகளை 50 சதவிகிதம் குறைக்க அரசு உறுதி பூண்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link