Pongal Incentive | ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Wed, 08 Jan 2025-6:49 pm,

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகளை ஊக்கத்தொகையாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதுக்குறித்து பார்ப்போம். 

ரேஷன் கடை ஊழியர்களாக பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

அதாவது தமிழக அரசு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்டு இருக்கக்கூடிய சூழலில், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஒவ்வொரு அட்டைக்கும் 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ரேஷன் கடைகளில் பணிபுரியும்  ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பொங்கல் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரு ரேஷன் கடைக்கு சுமார் 1,500 முதல் 2,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதன் மூலம், விற்பனையாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் சுமார் ரூ. 750 முதல் ரூ. 1,000 வரை ஊக்கத்தொகையாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக் தமிழக அரசு சார்பில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. இதுவரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு என்பது, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.

நாளை (ஜனவரி 8) தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link