ரூ.1.25 லட்சம் வரை அரசு கடன்... குறைந்த வட்டியில் - எப்படி வாங்குவது? யார் யாருக்கு கிடைக்கும்?
)
மகளிரின் வளர்ச்சிக்கு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, அதேபோல், அரசுப் பள்ளியில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
)
மேலும், பெண்கள் தொழில் ரீதியாகவும் வளர்ச்சி பெற பல ஆண்டுகளாக சுய உதவிக்குழுக்கள் மூலமும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களின் தொழில்களை விரிவுப்படுத்தவும், புதிதாக தொழில் தொடங்கவும் சுய உதவிக்குழுக்கள் சார்பில் கடன் பெறும் திட்டமும் உள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக குழுக்கடனாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் திட்டம் உள்ளது.
இந்த சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 கடன் வழங்கப்படும்.
மேலும் இந்த குழு தொடங்க சில விதிமுறைகளும் உள்ளன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் இந்த திட்டம் குறித்து விண்ணப்பிக்கலாம். மேலும் TABCEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்த குழு தொடங்கி 6 மாத காலம் நிறைவடைந்தால் மட்டும் கடன் கிடைக்கும். ஒரு குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்களே இடம்பெறுவார்கள். இந்த குழுவில் சேர விரும்புபவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரப்பினராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18-60 வரை உள்ள குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
குழு உறுப்பினர்கள் அதிகபட்சமாக 1.25 லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பிறப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். இந்த கடனுக்கு ஆண்டுக்கு 6% வட்டியாகும். இரண்டரை ஆண்டுகளில் இந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். மேற்கொண்ட தகவல்களுக்கு TABCEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணவும்.