Astro: குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்!
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பொதுவாகவே, இது மங்களகரமான ஆண்டாக இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள். புத்தாண்டு மிகவும் சுப பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
தமிழ் புத்தாண்டில் மிதுன ராசியினருக்கு, செல்வ செழிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் குறைவே இருக்காது. வெளியூர் அல்லது வெளிநாட்டு தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெற்றிகளை குவித்து அனைவரின் பாராட்டுக்களையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். முதலீட்டிற்கும் மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. கல்வித்துறையில் இருப்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். மாணவர்களும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ்க்கையில் வெற்றியை அடைவார்கள்.
கடக ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வேலையில் வெற்றிகளை குவித்து பாராட்டுகளை பெறுவார்கள். ஊதிய உயர்வு கிடைக்கும். உடன்பிறந்த சகோதரர்களின் ஆதரவும் இருக்கும். தொழிலில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். வாய்ப்புகளுக்கு குறைவிருக்காது. முக்கிய நபர்களின் சந்திப்பு மூலம், ஆதாயங்கள் கிடைக்கும். மனநிறைவு இருக்கும். நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். திட்டமிட்டபடி வேலைகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.
விருச்சிக ராசிகளுக்கு, பணவரவிற்கும் செல்வத்திற்கும் குறைவிருக்காது. முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும்., சொந்தமாக தொழில் தொடங்கும் யோசனையையும் செயல்படுத்தலாம். குழந்தைகள் கடின உழைப்பின் பல நாள் தேர்வுகளில் வெற்றி பெற்று, விரும்பிய பலன்களை பெறுவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பிறக்கும் பாக்கியம் கைகூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
தனுசு ராசியினரை பொறுத்தவரை, வேலையில் தொழிலில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். சேமிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, சந்தோஷம் நீடிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்தபடி வேலைகள் அனைத்தும் நிறைவேறும். எதிரிகள் கூட பாராட்டும்படி உங்கள் செயல்பாடு இருக்கும். பணியில் மூத்த அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். பதவி உயர்வு ஆகியவற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மீன ராசிகளுக்கு புத்தாண்டின் தொடக்கமே சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடி, மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிரிகளின் சதியை முறியடிப்பீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இனி அந்த நோயிலிருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழும் வாய்ப்பு கிடைக்கும்., கடின உழைப்பிற்கு அஞ்ச மாட்டீர்கள் என்பதால், வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். ஈடுபாட்டுடன் அனைத்து வேலையும் செய்து முடிப்பீர்கள். பணவரவிற்கும் குறை இருக்காது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.