1 நாளில் 2 கிலோ எடை குறைக்கலாம்! VJ ரம்யா கூறும் டிப்ஸை கேளுங்க..

Sun, 31 Mar 2024-3:22 pm,

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன், தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். 

இவரை வி.ஜே.ரம்யா என்றும் பலர் அழைத்து வருகின்றனர். இவருக்கு தற்போது 37 வயதாகிறது. 

ரம்யாவிற்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. திருமணம் நடைப்பெற்ற ஒராண்டிலேயே இவருக்கு விவாகரத்து ஆனது. 

ரம்யா, கடந்த சில ஆண்டுகளாக தன் வேலையிலும், தன் உடல் நலனிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர், தற்போது அடிக்கடி ஜிம் பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

ரம்யா, 1 நாளில் 2 கிலோ எடையை குறைப்பது எப்படி என்று ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் இதற்கான டயட் ப்ளானை பேசியிருக்கிறார். இது குறித்து பேசும் அவர், நம் உடலில் 60 விழுக்காடுகளுக்கும் மேல் தண்ணீர் இருப்பதாகவும் நாம் கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உட்கொண்டால் தண்ணீர் குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். 

இதனால், நீர் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என கூறும் அவர் தண்ணீர், ஒரு நாளைக்கு 2 கிலோ எடையை குறைக்க வழி செய்யும் என்றும் கூறியிருக்கிறார். 

உடல் எடைக்கு முக்கிய காரணிகளாக கூறப்படும் விஷயங்கள், உணவு பழக்கத்தில் இருந்து ஆரம்பிப்பதாக கூறும் அவர் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை மொத்தமாக தவிர்க்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். அவகேடோ, வாழை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கீரை ஆகியவற்றட்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். தண்ணீரும் அதிகமாக குடிக்க வேண்டுமாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link