ரஜினி to விஜய்: க்ளீன் ஷேவ் லுக்கில் கலக்கும் தமிழ் பிரபலங்கள்!
)
தமிழ் நடிகர்கள், திரைக்கு முன்னாலும் பின்னாலும் பலவிதமான லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அவர்களின் அந்த க்ளீன் ஷேவ் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம் வாங்க.
)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர், 24 படத்தில் நடிக்கும் போது க்ளீன் ஷேவ் லுக்கில் நடித்திருந்தார். இவர் இப்படத்தில் மொத்தம் 3 வேடங்களில் நடித்திருந்தார்.
)
கடின உழைப்பை போட்டு ஒவ்வொரு படத்திலும் நடிப்பவர், விக்ரம். இவர், ஐ படத்தில் நடிக்கும் போது தாடி, மீசை இல்லாமல் நடித்திருப்பார். அது மட்டுமன்றி கந்தசாமி படத்திலும் அதே போன்ற தோற்றத்தில் நடித்திருப்பார்.
நடிகர் விஜய், எந்த படத்திலும் பெரிதாக தாடி-மீசை இல்லாமல் நடித்ததில்லை. ஆனால், தனது 68வது படத்திற்காக தாடி-மீசையை எடுத்துள்ளார். அவர், தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார், சில படங்களில் தாடி மீசை இல்லாமல் நடித்துள்ளார். தற்போது தனது விடாமுயற்சி படத்திற்காக அவர் க்ளீன் ஷேவ் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், அடிக்கடி தாடி, மீசையை ஷேவ் செய்வது சகஜம். அப்படி அவர் ஒருமுறை ஷேவ் செய்த போது எடுத்த புகைப்படம், இதோ.
ரஜினிகாந்த், தனது படங்களில் எப்போதும் தாடி மீசையுடன்தான் தோன்றுவார். அவர், ஒருமுறை தனது ரசிகர்களுடன் க்ளீன் ஷேவில் இருக்கும் போது புகைப்படம் எடுத்துக்கொண்டார்.