Public Exam Date: மாணவர்களே தயாரா? 10,11,12 பொதுத்தேர்வு தேதி வெளியீடு!

Mon, 14 Oct 2024-10:18 am,

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

 

12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி, மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

11ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி, மார்ச் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

 

10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

 

தமிழகத்தில் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

 

இன்று கோவை சென்றுள்ள அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link