`Beautiful Devil`: சொன்னால் நம்புங்கள், இவர் மனிதர் தான்

Mon, 04 Jan 2021-9:03 pm,
Peralta Rodriguez

இந்த நபரின் பெயர் பெரால்டா ரோட்ரிக்ஸ் (Peralta Rodriguez). அர்ஜென்டினாவில் வசிக்கும் பெரால்டா தனது உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். தன்னை 'அழகான பிசாசு' ('Beautiful Devil' )என்று அனைவரும் அழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

Tattoo

பெரால்டா தனது உடலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட பச்சைக்குத்தும் கலைஞர்களிடம் பச்சை (Tattoo) குத்திக் கொண்டுள்ளார். இப்போதும் அவரது Tattoo ஆசை முடியவில்லை. உடலில் அதிக பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறாதாம்! தலை முதல் கால் விரல் நுனி வரை Tattoo மயமாக இருக்கும் அவர் உடலில் இனி பச்சை குத்திக் கொள்ள இடம் எங்கே இருக்கிறது?

The family refused to recognize

பெரால்டா தனது இணையுடன் அர்ஜென்டினாவில் வசிக்கிறார். பெரால்டாவின் Tattoo வெறி காரணமாக, அவரது குடும்பத்தினர் யாரும் அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

தனது தலையில் மூன்று 666 என்று Tattoo போட்டுக் கொள்ளப் போவதாக மத நம்பிக்கைக் கொண்டவர்களை வெறுக்கும் பெரால்டா கூறுகிறார். மத நம்பிக்கைக் கொண்டவர்களை   தனக்கு பிடிக்காது என்கிறார் பச்சை மனிதர்.  

சமீபத்தில், பெரால்டாவின் தலையில் 6 வது எண் பச்சை குத்தியுள்ளார் (Tattoo). அவரைப் பொறுத்தவரை, எண் 6 பிசாசுடன் தொடர்புடையது, எனவே அவர் இந்த எண்ணை தலையில் பச்சை குத்தியுள்ளார் (Tattoo).

 

பெரால்டா 26 ஆண்டுகளாக டாட்டூ கலைஞராக இருந்து வருகிறார். 2009 ஆம் ஆண்டில் முதன்முறையாக தனது உடலில் பச்சை குத்திக் கொண்டார். அது மட்டுமல்ல, தனது நாக்கை இரண்டாக வெட்டிக் கொண்டிருக்கிறார் இந்த ‘அழகானபிசாசு’. 

பெரால்டா தனது உடலில் பச்சை குத்துவதற்கு (Tattoo) முன்பு இப்படி இருந்தார். ஆனால் இன்று அவரா இவர் என்று நம்பமுடியாத அளவுக்கு மாற்றிவிட்டார். குடும்பத்தினர் இந்த பச்சை வெறி மனிதரை ஏன் அங்கீகரிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த புகைப்படமே போதுமானது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link