ITR Filing: ITR தாக்கல் செய்வதிலிருந்து இவர்களுக்கு விலக்கு, முழு விவரம் இதோ

Mon, 20 Sep 2021-6:20 pm,

வரி செலுத்துவதும், ITR தாக்கல் செய்வது இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் வருமான வரியின் வரம்பில் வராமல் போனாலும், ITR தாக்கல் செய்ய வேண்டும். ஒருவரின் வருவாய் அடிப்படை விலக்கு வரம்புகளை (Basic Exemption Limits) மீறினால், அவர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதிற்குட்பட்ட, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள்  அனைவரும் வரி செலுத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட 80 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த வரம்பு ரூ .3 லட்சம் ஆகும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ .5 லட்சம் வரை விலக்கு பெறுகிறார்கள்.

75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அமர்வில், 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வரி வருமானத்தை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு அவர்களது வருமான ஆதாரம் ஓய்வூதியம் மற்றும் வங்கியின் நிலையான வைப்பு (Fixed Deposit) மூலம் கிடைக்கும் வருமானமாக இருக்க வேண்டும்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) விதிகள் மற்றும் அறிவிப்புக்கான Form 12BBA-ஐ மூத்த குடிமக்களுக்காக நோடிஃபை செய்துள்ளது. மூத்த குடிமக்கள் இந்த படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானத்திற்கான வரி கழிக்கப்பட்டு அரசாங்கத்திடம் சேர்க்கப்படும். எந்த வங்கி கணக்கில் ஓய்வூதியம் டெபாசிட் செய்யப்படுகின்றதோ, அதே வங்கியில் வட்டியில் இருந்து வட்டி வருமானம் கிடைக்கும் கணக்குகளுக்கு மட்டுமே ITR தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு கிடைக்கும். இந்த படிவத்தை நிரப்புவது வரி செலுத்துவோருக்கு TDS கிளெய்மிலிருந்து நிவாரணம் அளிக்கும். 

தற்போது, ​​60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு வருடத்தில் ரூ .50,000 க்கு மேல் சம்பாதிக்கும் FD வட்டிக்கு வங்கிகள் 10% TDS கழிக்கின்றன. ரூ. 5 லட்சத்தை விட குறைவாக இருக்கும் வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள், தங்கள் FD வட்டியில் இந்த கழிப்பை நிறுத்த படிவம் 15H ஐ தங்கள் வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். இருப்பினும், ரூ .5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் டிடிஎஸ் பிடிப்பிலிருந்து தப்ப முடியாது. 10% என்ற விகிதத்தில் அவர்களது வட்டி வருமானத்தில் இருந்து டிடிஎஸ் கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட அதிக டிடிஎஸ்-ஐ பின்னர் திருப்பி பெற்றுக்கொள்ளலாம்.

படிவம் 12BBA ஐ நிரப்புவதன் மூலம், வரி செலுத்துவோர் வரித் தொகையைத் திரும்பப் பெறுவதில் சிரமப்பட வேண்டி இருக்காது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பின்படி, வங்கி மூத்த குடிமக்களின் வருமான வரியை 'பயனுள்ள விகிதங்களின்படி' கழிக்கும், அதாவது, பொருத்தமான வரி வரம்பின் கீழ் வரி கழித்தல் இருக்கும். FD வட்டிக்கு தனியாக TDS கழிக்கப்படாது. CBDT, செப்டம்பர் 2 அன்று படிவம் 12BBA -ஐ அறிவித்தது. மூத்த குடிமகக்கள் ITR தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெற, இதை அவர்களது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link