குழந்தைகளுக்கு 3 வயது முதல் கற்றுத்தர வேண்டிய 7 பாடங்கள்!! நல்லவர்களாக வளருவர்..
மரியாதை:
பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும் சரிசமமாக மரியாதை கொடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளரும் போது எந்த தாழ்ச்சி உயர்ச்சியும் இல்லாமல் அனைவரையும் சரிசமமாக பார்க்க கற்றுக்கொள்வர்.
ஆர்வம்:
இந்த உலகில் எதுவுமே ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று கேள்வி கேட்டால்தான் தெரியும். கேள்வி கேட்கும் ஆர்வத்தை அவர்கள் மத்தியில் தூண்ட வேண்டும். அவர்களை சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களை பற்றியும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும்.
புரிந்துணர்வு:
பிறரை புரிந்து கொள்வது எப்படி, சிரமம் என்ற ஒன்று வரும் போது பிறருக்கு உறுதுணையாக இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.
மன்னிக்கும் குணம் :
குழந்தைகளுக்கு மன்னிப்பதும் மறப்பதும் எப்படி என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படி பிறரை மன்னித்தால் மட்டும்தான் மனம் இலகுவாகும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
மனநிறைவுடன் இருக்க வேண்டும்:
எதை செய்தாலும், கவனச்சிதறல் இன்றி செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் செய்யும் வேலைகளில் அவர்களுக்கே மனநிறைவு பிறக்கும்.
கருணை குணம்:
எங்கு சென்றாலும், பிறரிடம் கருணையுடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.
நன்றியுணர்வு:
தங்களுக்கு எது கிடைத்தாலும் அதற்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு பெரியவர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.