UPI பேமெண்ட் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்
சர்பிங் செய்யும் போது பாதுகாப்பாக இருங்கள்: சில சமயங்களில் 'வெகுமதி' பெறுவதற்காக, தெரியாத சில மொபைல் எண்ணுக்கு பணத்தை மாற்ற நீங்கள் ஆசைப்படலாம். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். இணையதளத்தின் நம்பகத்தன்மை குறித்து உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.
மொபைல் பாதுகாப்பு: உங்கள் மொபைல் போனைப் லாக் செய்து வைக்கவும். எந்தச் சூழ்நிலையிலும் அலைபேசியை அந்நியர்களுக்கு கொடுக்கக் கூடாது. அரசு அதிகாரிகள் என கூறிக் கொண்டு உங்களிடன் தனிப்பட்ட வங்கி விபரங்களை கேட்கலாம். எந்த ஒரு உண்மையான அரசு அதிகாரியும் இதை செய்ய மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
UPI பரிவர்த்தனை வரம்பு: மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி தினசரி UPI பரிவர்த்தனை வரம்புகளை வைப்பது நல்லது. கணக்கு ஹேக் செய்யப்பட்டாலும், மோசடி செய்பவர்கள் உங்கள் கணக்கில் இருந்து எல்லாப் பணத்தையும் எடுக்க முடியாத நிலை ஏற்படும், பணம் ஓஒரளவு பாதுகாப்பாக இருக்கும்.
UPI பின் மாற்றம்: ஒருவர் தொடர்ந்து UPI பின்னை மாற்ற வேண்டும். உங்கள் UPI பின்னை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும்.
UPI பின்: UPI பின்னை யாருடனும் பகிரக்கூடாது. குறிப்பாக அரசு அல்லது வங்கி அதிகாரிகள் என்று கூறிக்கொள்பவர்கள் மூலம், வங்கிக் கணக்கிற்கான தகவல்களை கேட்டு வரும் தொலைபேசிகள் குறித்து மிகவும் எச்சரிக்கை தேவை.