இருசக்கர வாகனஓட்டிகளுக்கு டிராஃபிக் போலீஸ் எதற்கெல்லாம் அபராதம் போடலாம்? விதிமுறைகள் சொல்வது என்ன?

Fri, 09 Aug 2024-3:57 pm,

போக்குவரத்து விதிகள் மற்றும் அவற்றை மீறினால் என்ன அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை வாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துக் கொள்ளவேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் தெரிந்துக் கொள்ளவேண்டிய விதிமுறைகள்  

ஆவணச் சரிபார்ப்பு

ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் (RC), காப்பீடு மற்றும் மாசு கட்டுப்பாட்டின் கீழ் (PUC) சான்றிதழ் போன்ற பைக்கின் தேவையான ஆவணங்களைச் சரிபார்க்கும் உரிமை போக்குவரத்து போலீசாருக்கு உண்டு

முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் வாகனத்தை பறிமுதல் செய்யும் உரிமை போலீசாருக்கு உண்டு

தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது தவறு. ஹெல்மெட் அணியாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும்

ஓட்டுநர் உரிமம் உங்களிடம் இருந்தாலும், அது செல்லுபடியாகக்கூடியதாக இல்லாவிட்டால் அபராதம் தான்

சாலையில் வாகனம் ஓட்டும்போது ஸ்டண்ட் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் தொடுக்கப்படும்

இருசக்கரத்தில் இருவர் பயணிக்க வேண்டும் என்று விதிமுறைக்கு மாறாக இரண்டுக்கும் அதிகமானவர்கள் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்

இருசக்கர வாகன ஓட்டிகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அது தவறு... அபராதம் விதிக்கப்படும்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும்போது போலீசார் உங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link