மருத்துவராக பணியாற்றிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்
இண்டிகோ விமானம் நடுவானில் சென்றுக் கொண்டு இருக்கும் போது, விமானத்தில் டாக்டர் யாராவது இருக்கிறார்களா? என்று விமானப் பணிப்பெண்ணிடமிருந்து கேட்கப்பட்டுள்ளது.
அதிகமாக வியர்த்துப் போயிருந்த பயணி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.
செரிமாணக் கோளாறால் அதிகம் வியர்த்து சிரமப்பட்டார் பயணி
ஆளுநராக இருந்தாலும் உடனடியாக சென்று மருத்துவ முதலுதவிகள் செய்தார் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்
ஹைதராபாத் விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து, அந்த பயணி, விமான நிலைய மருத்துவ அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ உதவியளித்த ஆளுநருக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்