ரவிச்சந்திரன் அஷ்வினின் ஆடம்பர வாழ்க்கை! சொத்து மதிப்பு மற்றும் இதர சம்பள விவரம்!
சமீபத்தில் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினின் நிகர மதிப்பு தோராயமாக ரூ. 130 கோடி என்று கூறப்படுகிறது. சென்னையில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு சுமார் 8 கோடிக்கும் மேல்.
அஸ்வினின் ஆண்டு வருமானம் சுமார் 10 கோடிக்கும் மேல் உள்ளது. கிரிக்கெட், யூடியூப் மற்றும் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுகிறார். இது தவிர ஐபிஎல் மூலம் கோடிகளில் சம்பளம் பெறுகிறார்.
தற்போது ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அஸ்வின். ஒரு சீசனுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். மேலும் பிசிசிஐயின் ஒப்பந்தம் மூலம் ஆண்டு சம்பளம் ரூ. 5 கோடி பெறுகிறார்.
ஒப்போ, மூவ், ட்ரீம்11 உள்ளிட்ட பல தனியார் பிராண்டுகள் மூலமும் அஷ்வின் வருமானம் பெறுகிறார். அஸ்வின் சென்னையில் அவரது அம்மா, அப்பா, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
அஸ்வின் சமீபத்தில் அவரது 101வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை 36 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 516 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற டெஸ்டுக்கு முன்பு மொத்தமாக 5 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் அடித்து இருந்தார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது 6வது சதத்தை பூர்த்தி செய்தார்.