‘தலைநகரம்’ பட நாயகியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க..
2006ஆம் ஆண்டு வெளியான, தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், ஜோதிர்மயி. இவரது தற்போதைய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜோதிர்மயி, மலையாள சினிமாவில் இருந்து தமிழ் திரையுலகிற்குள் வந்தவர். மாடலிங் துறையில் இருந்த இவரை சினிமா அப்படியே இழுத்துக்கொண்டது.
இவர், 2004ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 6 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
விவாகரத்திற்கு பிறகு, ஜோதிர்மயி இயக்குநரும் நடிகருமான அமல் நீரத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 2015ஆம் ஆண்டு நடைப்பெற்றது.
ஜோதிர்மயியின் தற்போதைய புகைப்படம்தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. தலைநகரம் படத்தில் நடித்த போது எடுத்த இவரது புகைப்படத்தையும் இவரது தற்போதைய புகைப்படத்தையும் ரசிகர்கள் ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
ஜோதிர்மயி, மலையாள திரையுலகில் இன்னும் பிரபலமாக இருக்கிறார். இவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர், நஸ்ரியாவுடன் 2020ஆம் ஆண்டு எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படமும் அப்போது வைரலானது.
ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்த இவர், தற்போது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் அடையாளம் தெரியாமல் மாறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.