Thalapathy 68 அப்டேட்! 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் பிரபல ஹீரோ?
)
அனிருத்தின் இசையில் விஜய், சஞ்சய் தத் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
)
இதற்கிடையில், இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 68' படத்தின் திரைக்கதையில் பிஸியாக இருக்கிறார்.
)
இந்த படத்தின் மூலம் இந்தியாவில் இதுவரை கேள்விப்படாத இருநூறு கோடி ரூபாய் சம்பளத்துடன், அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றுவார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
'தளபதி 68' படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகர் ஜெய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மையாக மாறினால், 2002 இல் வெளியான 'பகவதி' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பிறகு இது விஜய்யுடன் அவரது இரண்டாவது படமாகும்.