முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகும் தளபதி 69! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார் நடிகர் விஜய். மேலும் சினிமாவில் இருந்து முழுவதும் விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விஜய்யின் 68 வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இந்த மாதம் வெளியானது. படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான 69வது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்தது.
தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்க உள்ளார் என்றும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
KVN தயாரிப்பு நிறுவனம் தமிழில் முதல் முறையாக இந்த படத்தை தயாரிக்க உள்ளது. மேலும் தளபதி விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார்.
முழுக்க அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.