விஜய் எப்படியிருக்காரு பாருங்களேன்..! தி கோட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..
விஜய்யும் வெங்கட் பிரபுவும் முதன்முதலாக இணைந்திருக்கும் படம், தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில், விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, லைலா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
விஜய், தந்தை-மகன் என இரு கதாப்பாத்திரங்களில் படத்தில் நடித்திருப்பதால் அவருக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில், இதுதான் பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.
விஜய்-வெங்கட் பிரபுவின் முதல் கூட்டணியே வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கிறது. தற்போது, இப்படம் சுமார் 200 கோடி அளவில் உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தி கோட் படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வழங்கியிருக்கிறார். படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.400 கோடி என்றும், அதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூ.200 கோடி என்றும் அவரே ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.
நடிகை த்ரிஷா, தி கோட் படத்தில் “மட்ட” பாடலில் விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனடமாடியிருக்கிறார். இது குறித்த BTS புகைப்படங்களையும் அவர் முன்பு பகிர்ந்திருந்தார்.
அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த தருணங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
யுகேந்திரன், தி கோட் படத்தில் வில்லன்களில் ஒருவராக வருகிறார். இவருக்கு, குட்டி விஜய்யுடன் சேர்ந்து பணியாற்றும் வேலை. இதையடுத்து, விஜய், மோகன், வெங்கட் பிரபு ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.