மயிர்க்கூச்செறியும் திகிலான மலை பாதைகள்..!!!
ஸ்பெயினின் தெற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள 110 ஆண்டுகள் பழமையான 'எல் குமினிடோ டெல் ரே' பாதை உலகின் மிக ஆபத்தான பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது 'கிங்ஸ் பாதை' என்றும் அழைக்கப்படுகிறது. இது 1905 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த ஆபத்தான பாதை நீர் மின் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சாலை 2000 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. ஏனெனில் இரண்டு பேர் மேலே இருந்து விழுந்து இறந்தனர்.
மேற்கு சீனாவில் உள்ள குலுக்கான் கிராமத்தின் குழந்தைகள் பள்ளியில் படிக்க இந்த ஆபத்தான பாதை வழியாக செல்கின்றனர். 5000 அடி நீளமுள்ள இந்த சாலை 'கிளிஃப் பாதை' என்று அழைக்கப்படும் ஒரு பாறையில் கட்டப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுஷான் கிளிஃப்சைட் பாதை, ஹுவாஷான் மஞ்சள் ஆற்றின் படுகையின் அருகே அமைந்துள்ளது. இந்த பாதை ஷாங்க்சி மாகாணத்தின் குயின்லிங் மலைகளின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது. இங்கே இரண்டு நடைப்பாதைகள் ஹுஷனின் வடக்கு சிகரத்திற்கு 1614 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. இது 'ஹுவா ஷான் யூ' என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. பல சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். அரசாங்கம் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் நடக்கின்றன.
பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில், செயிண்ட் பியர் டி இன்ட்ரெமொண்டில் அமைந்துள்ள இந்த பாதையை உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் கடக்க வேண்டும்.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள யுயாங்கில் 300 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மிக ஆபத்தான மலை பாதையை சீனாவின் ஸ்பைடர்மேன் இராணுவம் அமைத்துள்ளது. இந்த ஆபத்தான பாதையைப் பார்த்தாலே நமது மூச்சு நின்று விடும்.