கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெறலாம்... `தீர்க்கத்தரிசி` விழாவில் சத்யராஜ்!

Tue, 21 Feb 2023-1:42 am,

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி: இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள். 

 

இயக்குநர் ஹரி: படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல்துறை தான். அதைக் கருவாக வைத்து எடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் ராம்குமார் சிவாஜி கணேசன்: இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்தின் காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

நடிகர் இயக்குநர் தம்பி ராமையா: காவல்துறை கதாபாத்திரங்கள் தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படமும் காவல்துறை பற்றிய கதையாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.  

நடிகர் அஜ்மல் பேசியதாவது: சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும்.

நடிகர் சத்யராஜ் கூறியதாவது: இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link