ஆர்சிபிஐ சிதைத்த அந்த 5 பவுலர்கள் யார்?
இதற்கு முக்கிய காரணம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களையே சேரும். ஆரம்பம் முதலே அமர்களமாக பந்துவீசினர். ஜேசன் தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகளை எடுத்து ஆர்சிபி சரிவை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஒட்டு மொத்தமாக ஐபிஎல் தொடரில் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக சிறப்பாக பந்துவீசியவர் தமிழக வீரர் நடராஜன். 3 ஓவர்கள் மட்டுமே வீசிய நடராஜன் 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வரும் மொத்தம் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சுழற்பந்துவீச்சாளர் சுஜித் சிறப்பாக பந்துவீசினார். 3 ஓவர்கள் வீசிய அவர் 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புயல்வேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக், அதிவேகமாக பந்துவீசி இப்போட்டியிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்த அவர் 1 விக்கெட்டை கைப்பற்றினார். இந்த ஐபிஎல் தொடரில் 10 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக விளங்கிய புவனேஷ்வர் குமார் 2.1 ஓவர் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.