இந்த மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Sat, 10 Sep 2022-6:31 pm,

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2022 செப்டம்பர் மாதம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த மாதம் இவர்களுக்கு திடீர் பண ஆதாயத்தையும், அபரிமிதமான வெற்றியும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். . இந்த காலகட்டத்தில் சொத்து வாங்கும் யோகம் உருவாகலாம். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

 

கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதுவரை தொழிலில் இருந்து வந்த தடைகளும் வெற்றி கிடைப்பதில் இருந்த தாமதமும் இப்போது விலகும். இந்த மாதம் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.

செப்டம்பர் 2022 மீன ராசியினருக்கும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் எடுத்த வேலைகள் அனைத்தும் எளிதாக முடிவடையும். வேலை தேடுபவர்கள் மற்றும் வியாபாரிகள் இருவரும் வெற்றி பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த மாதத்தில் செய்யும் முதலீட்டால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணம், வருமானம் பெருகும். காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடிய இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link