வைட்டமின் பி 12 மிக அதிக அளவில் இருக்கும் உணவுகள் எவை
தயிரில், அதிகளவு வைட்டமின் பி 12 அல்லது சயனோகோபாலமைன் உள்ளது. ஒரு கப் சாதாரண தயிரில், 28 சதவீதம் அளவிற்கு வைட்டமின் பி 12 உள்ளது. தயிர் உட்கொள்ளல் வைட்டமின் பி12 அளவை மேம்படுத்தவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
சால்மன் மீன் இயற்கையாகவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தில் நிறைந்துள்ளது. சால்மன் வைட்டமின் பி 12 இன் நல்ல மூலமாகும். இது இதயம், எலும்புகள், மூளை மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது.
புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் முட்டை ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் பி12 அளவை அதிகரிக்க உதவுகிறது.
நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் வைட்டமின் பி12 அளவை இயற்கையாக அதிகரிக்க சோயா பனீர், முழு தானியங்கள், பால் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
வைட்டமின் பி 12 ஊட்டச்சத்தானது இறைச்சி போன்ற விலங்கு சார்ந்த உணவுகளில் இருந்து மட்டுமே கிடைக்க கூடியது. இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் பி 12 கிடைக்கிறது.