சர்க்கரை நோயை உடனடியாக குறைக்கும் உணவுகள்!
அவகேடோ பழத்தில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது முக்கியமாக நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கீரைகள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் தினமும் சாப்பிடுவதால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் அவர்களது உணவில் 2 முட்டைகளை சேர்த்துக்கொள்ளலாம், இதிலுள்ள கொழுப்பு மற்றும் புரதம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
தயிர், மோர் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை தினமும் சிறிதளவு உணவோடு சேர்த்துக்கொள்வது உங்களது உடலில் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்கிறது.
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் சருமமும் மேம்படுவதோடு, உடலில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.