உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை இந்த சூப்பர் உணவுகள் அதிகப்படுத்தும்!
பல காரணங்களால் காற்றின் தரம் குறைந்து வருகிறது. நச்சு கலந்த காற்றை நாம் சுவாசித்தால் நமது நுரையீரலுக்கு நிறைய ஆபத்து ஏற்படுகிறது. இதனை சரி செய்ய நமது தினசரி உணவில் சில பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோசில் அதிகளவில் ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றை தினசரி சாப்பிட்டு வந்தால், நுரையீரலில் ஏற்படும் நோய் மற்றும் மற்ற சுவாச பிரச்சனை அபாயத்தை குறைகிறது.
கீரை
முட்டைகோஸை போலவே கீரையிலும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நுரையீரலில் ஏற்படும் அபாயத்தை குறைத்து, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
பூண்டு
பொதுவாகவே பூண்டில் நிறைய சத்துக்கள் உள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. பூண்டை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாச நோய்த்தொற்றுகள் குறையும்.
மஞ்சள் மற்றும் இஞ்சி
மஞ்சளில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவை உள்ளது. இஞ்சி சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மஞ்சள் சாப்பிடுவது நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைகிறது.