வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, தொட்டதெல்லாம் துலங்கும்
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் பணம் வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வக்ர சனி வரப்பிரசாதமாக அமையும். உத்தியோகத்தில் பெரிய பதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த தொழில் ஏற்றம் இப்போது நடக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
மிதுன ராசி: வக்ர சனி மிதுன ராசிக்காரர்களுக்கு பண பலனை தரும். எதிர்பார்த்த பதவி உயர்வு-சம்பள உயர்வு விரைவில் கிடைக்கும். மனைவியுடன் உறவு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு சாதகமான காலம். வியாபாரம் பெருகும். பெரும் பலன் ஏற்படும். முதலீடு செய்ய இதுவே நல்ல நேரம்.
கன்னி ராசி: சனியின் வக்ர பெயர்ச்சியால் உங்கள் எதிரிகளை நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் வெளிநாடு செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். உயர்கல்விக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இனி நல்ல செய்தி கிடைக்கும்.
தனுசு ராசி: சனியின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தற்போது முடிவுக்கு வரும். தொழில்-வியாபாரத்தில் சாதகமான காலம் அமையும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை மேம்படும். முதலீட்டுக்கு நல்ல நேரம்.