போகி அன்று ‘இந்த’ 7 பொருட்களை எரிக்கவே கூடாது!! என்னென்ன தெரியுமா?
போகி பண்டிகையன்று, யார் மீது என்ன கோபம் இருந்தாலும் உங்கள் குடும்பத்தாருடன் நீங்கள் இருக்கும் புகைப்படத்தை, அல்லது பிடித்தவருடன் இருக்கும் புகைப்படத்தை எரிக்க கூடாது. அப்படி செய்தால், அவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு விலகி விடும் என நம்பப்படுகிறது.
கடவுள் சிலைகள், கடவுள் சார்ந்த புத்தகங்கள் ஆகியவற்றை போகியன்று எரிக்க கூடாது. அப்படி செய்தால், அது மத ரீதியாக மரியாதை அற்றதாக கருதப்படுகிறது. இதை செய்தால், துரதிர்ஷ்டம் நம்மை தாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
நீங்கள் அல்லது உங்களுடன் இருக்கும் ஒருவர், சில பொருட்களை உணர்வுபூர்வமாக வைத்திருப்பர். அவற்றை போகி தீயில் போட்டு எரிக்க கூடாது.
சாப்பிடும் பொருட்களை, போகி தீயில் போட்டு எரிக்க கூடாது. இதனால் உணவை வீணாக்குவதுடன், சில மதங்களில் இது பாவச்செயலாகவும் கருதப்படுகிறது.
ரப்பர், ப்ளாஸ்டிக் பொருட்கள், சுகாதாரத்தை மாசு படுத்தும் பொருட்களை நாம் என்றும் எரிக்க கூடாது. ஆனால், போகி சமயத்தில் பலர் இந்த விஷயங்களை செய்வர். இது, அந்த நாளின் மகத்துவத்தையே கெடுத்து விடுவதாக பலர் நம்புகின்றனர்.
ஒருவரிடம் இருந்து வாங்கிய பரிசு பொருட்கள் அல்லது ஒருவருடனான உறவை காண்பிக்கும் பொருட்களை நீங்கள் எப்போதும் போகி தீயில் எரிக்க கூடாது.
புதிதாக வாங்கிய பொருட்கள் அல்லது, உபயோகத்தில் இருக்கும் பொருட்களை போகி தீயில் எரிக்க கூடாது.