தினேஷ் கார்த்திக்கின் நெருங்கிய நண்பர் யார் தெரியுமா?
தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் இடம்பிடித்திருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். ஆஇந்த இடத்துக்கு வருவதற்கு தன் மீது வைத்த நம்பிக்கை மட்டுமே காரணம் எனக் கூறியுள்ளார். அபிஷேக் நாயர் அவருக்கு முழுமையாக உதவியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக அபிஷேக் நாயரை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியபோது அவருக்கு முழுமையாக உதவியது அபிஷேக் நாயர் தானாம். மும்பையில் ஒரே ஒரு அறையில் தங்க வைத்து பயிற்சி கொடுத்துள்ளார்.
இந்த பயிற்சி இப்போது இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்கை மீண்டும் அழைத்து வந்துள்ளது.