பணக்காரர் ஆகும் லட்சியத்தை அடைய இருக்கும் முட்டுக்கட்டையை தவிர்க்க முதலீட்டு டிப்ஸ்
கோடீஸ்வரராக வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள், ஆனால் ஒரு சிலரால் மட்டுமே இந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. இதற்குக் காரணம் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறுதான். முதலீடு செய்யாதது தான்
நீங்கள் பணத்தை சம்பாதித்தாலும், அதை வெறுமனே சேமித்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல, அந்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்யப்பட்ட பணம் காலப்போக்கில் வளர்ந்து எதிர்காலத்தில் பெரிய தொகையாக மாறும். எனவே நீங்கள் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், நீங்கள் விரைவில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்.
பணவீக்கம் காரணமாக, தங்களிடம் பணம் இல்லை, சேமிப்பு இல்லை என்று பலர் சொல்கின்றனர். ஆனால் நீங்கள் விரும்பினால், குறைவான சம்பளத்தில் கூட சேமிக்கலாம்.
உங்கள் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்
சேமிப்பிற்கான 50:30:20 சூத்திரத்தை நீங்கள் பின்பற்றலாம். இந்த சூத்திரத்தின் கீழ், உங்கள் அத்தியாவசிய செலவுகளுக்கு 50 சதவீதம், விருப்பத்திற்கு 30 சதவீதம் செலவிடுங்கள். ஆனால் கண்டிப்பாக 20 சதவீதத்தை சேமிக்க வேண்டும். 30,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் மாதம் ரூ.4,000 வரை சேமிக்கலாம்
SIP மூலம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் சந்தையின் போக்குக்கு ஏற்ப பலன் கொடுக்கும் என்றாலும், பெரும்பாலும் இந்தத் திட்டம் சராசரியாக 12 சதவீத வருமானத்தைக் கொடுக்கிறது. இது மற்ற திட்டங்களின் வருமானத்தை விட அதிகமாகும்
SIP கால்குலேட்டரின் படி, மாதம் ரூ 4,000 SIP ஐத் தொடங்கினால், ஆண்டுக்கு 48,000 ரூபாய் என தொடர்ந்து 28 வருடங்கள் முதலீடு செய்தால், மொத்தம் 13,44,000 ரூபாய் முதலீடாக மாறும். 12 சதவிகித வருமானத்தின் படி, 96,90,339 ரூபாய் கிடைக்கும்.
முதலீடு செய்த தொகை மற்றும் வருமானத்துடன் மொத்தம் ரூ.1,10,34,339 ஆக அதிகரிக்கும். 30 ஆண்டுகள் வரை முதலீட்டைத் தொடர்ந்தால், ரூ.1,41,19,655 கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருந்தால், கிடைக்கும் தொகை அதிகமாக இருக்கலாம்.