கண்களுக்கு கீழ் இருக்கும் கரு வளையத்தை நீக்க..‘இந்த’ 7 பழங்களை சாப்பிடுங்க!

Tue, 16 Jul 2024-1:03 pm,

கருவளையங்கள்:

கருவளையங்களை சரிசெய்ய, நாம் சாப்பிட வேண்டிய சில உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

தர்பூசணி:

தர்பூசணி, ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது. இது, கண் பாதிப்பில் இருந்து தவிர்க்க உதவும். இதில் 92% தண்ணீர் நிறைந்திருப்பதால் உடலில் நீர்ச்சத்தும் அதிகரிக்கும்.

தக்காளி:

தக்காளியில் இருக்கும் சத்துகள், சருமத்தை பொலிவாக்க உதவும். இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி சத்துகள் சருமத்தை பொலிவாக்கும். 

பப்பாளி:

பப்பாளியில் வைட்டமின் ஏ சத்துகள் இருக்கிறது. இது, கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்க உதவும். இதில் இருக்கும் வைட்டமின் சி சத்துகள் முகத்தை பொலிவுற செய்யும். 

ஆரஞ்சு:

ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துகள், முகத்தில் இருக்கும் கருமைகளை தவிர்க்க இதை சாப்பிடலாம். இதன் தோலும் சருமத்தை பொலிவாக்க உதவும். 

கீரை வகைகள்:

கீரை வகை காய்கறிகளில், வைட்டமின் கே சத்துகள் முகத்தை பொலிவாக்கும். இதனால், உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். சில சமயங்களில் தூக்கமின்மை பிரச்சனையில் இருக்கும் போது, கண்கள் வீங்கியது போல தோன்றும். இதை தவிர்க்க, கீரை வகை காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். 

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால், கருவளையத்தை ஏற்படுத்துவதை நிறுத்தும். அது மட்டுமன்றி, இது ரத்த நாணங்களை அதிகரிக்கவும் உதவும்.

ப்ளூ பெர்ரீஸ்:

ப்ளூ பெர்ரியில் ஒமேகா 3, வைட்டமின் கே மற்றும் சி சத்துகள் இருக்கின்றன. இதை சாப்பிடுவதால், முகம் பொலிவுரும்-கருவளையமும் நீங்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link