தொப்புளை பத்திரமா பாத்துக்கோங்க! இல்லன்னா ‘இந்த’ பிரச்சனைகள் வரும்..

Fri, 05 Jan 2024-2:55 pm,

குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடி துண்டிக்கப்படும். இது, தொப்புள் என்று அழைக்கப்படுகிறது. தொப்புளின் அளவு சிறியதாகவும் முக்கியமற்றதாகவும் தோன்றினாலும், அது உடலில் பல மாற்றங்களை கண்டுகொள்ள உதவும்.

 

ஒரு நபரின் ஆரோக்கியத்தை அவரது தொப்புளை வைத்து தெரிந்து கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், இதை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

தொப்புளை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் அதை சுற்றி சிவப்பாக மாறும், வீங்கவும் செய்யும். இதனால் உங்களது தொப்புளை சுற்றி நோய் தொற்று ஏற்படலாம். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மேலும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குடலிறக்கம் என்பது ஒரு உள்ளிருக்கும் உறுப்புகள் வயிற்றின் பலவீனமான பகுதி வழியாகத் தள்ளும் ஒரு நிலை அகும். தொப்புள் வெளிப்புரமாக இருப்பது சமயத்தில் குடலிறக்கத்தை குறிக்கிறது. குடலிறக்கம் உள்ளவர்களுக்கு தொப்புள் பகுதியில் வலியுணர்வு ஏற்படும். 

அழற்சி பாதிப்பு பெரும்பாலும் சிறார்களையும் குழந்தைகளையும் தாக்கும் என கூறப்படுகிறது. தொப்புளில் இருந்து சீழ் வருவது, தொப்புள் வீங்குவது உள்ளிட்டவை இதன் அறிகுறியாகும். இதனால் உடலில் பல்வேறு கோளாறுகள் உருவாகலாம். தொப்புளில் இருந்து ஆரம்பிக்கும் இந்த பாதிப்பு, உடனடியாக சரிசெய்ய படவில்லை என்றால் மெதுமெதுவாக உடல் முழுவதும் கூட பரவலாம். 

தொப்புளை சுற்றியுள்ள பகுதிகள் வீங்குவதற்கு ஆங்கிலத்தில் Ummbilical Granuloma என பெயர். இது, கைகுழந்தைகளுக்குதான் பெரும்பாலும் வரும். உடனடியாக இதற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அசௌகரியங்கள் ஏற்படும். 

உங்கள் தொப்புளை சுத்தமாக வைத்திருப்பதற்கும், உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கும் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். உடலை நாம் தினம் தோறும் குளித்து சுத்தமாக வைத்திருந்தாலும், பெரும்பாலான சமயங்களில் தொப்புளை மறந்து விடுவோம். எனவே, சோப் அல்லது பாடி லோஷனை கொண்டு தொப்புளை சுத்தப்படுத்துதல் வேண்டும். இதனால் தொப்புளை சுற்றி தோல் நோய்களும் வராமல் தடுக்கலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link