மார்கழி 5... இன்றைய ராசிபலன்... இந்தெந்த ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகுது!

Fri, 20 Dec 2024-5:41 am,

பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

மேஷம்: சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். துறைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட கருத்துக்களை கூறுவதில் விவேகம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

அஸ்வினி : தெளிவுகள் பிறக்கும்.

பரணி : அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை : விவேகம் வேண்டும்.

ரிஷபம்: மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். சிற்பப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் அமைதி ஏற்படும். தனிப்பட்ட விசயங்களை பகிர்வதை தவிர்க்கவும். தாயின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வாசனை திரவிய பொருட்களால் இலாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். தாமதம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

கிருத்திகை : மேன்மை ஏற்படும். 

ரோகிணி : அமைதி உண்டாகும்.

மிருகசீரிஷம் : இலாபம் கிடைக்கும்.

மிதுனம்: தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும். 

திருவாதிரை : மதிப்புகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : திருப்தி உண்டாகும்.

கடகம்: மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

புனர்பூசம் : குழப்பங்கள் விலகும்.

பூசம் : பிரச்சனைகள் குறையும்.

ஆயில்யம் : துரிதம் ஏற்படும்.

சிம்மம்: செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலை அமையும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : குழப்பங்கள் உண்டாகும்.

பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.

உத்திரம் : பொறுமை வேண்டும்.

கன்னி: உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். வேலையாட்கள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடி உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.

சித்திரை : நெருக்கடி உண்டாகும். 

துலாம்: வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் :  வெளிர்பச்சை நிறம் 

சித்திரை : அனுகூலம் உண்டாகும்.

சுவாதி : வேறுபாடுகள் குறையும்.

விசாகம் : வாய்ப்புகள் கைகூடும். 

 

 

விருச்சிகம்: உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தொழிற்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். மற்றவர்களின் பணிகளைச் சேர்த்து செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

அனுஷம் : அனுபவம் மேம்படும்.

கேட்டை : சாதகம் உண்டாகும்.

 

 

தனுசு: ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் மனதிற்குப் பிடித்தவாறு சில மாற்றங்களைச் செய்வீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் 

மூலம் : முடிவுகள் கிடைக்கும். 

பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்: வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இணையம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் 

உத்திராடம் :  விவேகம் வேண்டும்.

திருவோணம் : சிந்தித்து செயல்படவும். 

அவிட்டம் : சேமிப்புகள் குறையும். 

கும்பம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

சதயம் : பிரச்சனைகள் குறையும்.

பூரட்டாதி : ஆதரவு உண்டாகும்.

மீனம்: மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் புதுமையான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். பொறாமை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.

ரேவதி : புதுமை உண்டாகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link