மார்கழி 15 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Mon, 30 Dec 2024-7:14 am,

உத்தியோகம் தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். கடன் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். கடந்த கால நினைவுகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும்.  மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

அஸ்வினி :  குழப்பமான நாள். பரணி : மாற்றமான நாள். கிருத்திகை : அதிர்ஷ்டகரமான நாள்.

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். காப்பீடு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல்கள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : ஆர்வம் ஏற்படும். ரோகிணி : விட்டுக்கொடுத்து செல்லவும். மிருகசீரிஷம் : ஒத்துழைப்பான நாள்.

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் :  நீல நிறம்

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும். திருவாதிரை : அனுகூலமான நாள். புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவினர்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனை சார்ந்த வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். பூசம் : மேன்மையான நாள். ஆயில்யம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமித்த பணம் உரிய நேரத்தில் கிடைக்கும். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்களை தவிர்க்கவும். ஆதரவற்றோர்க்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதுமையான சில செயல்களில் ஈடுபாடுகள் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள். பூரம் :  கவனம் வேண்டும் உத்திரம் : ஈடுபாடுகள் ஏற்படும்.

பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : அனுபவம் கிடைக்கும். அஸ்தம் : ஒத்துழைப்பான நாள். சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.

தள்ளிப்போன சில காரியம் திடீரென முடியும். தந்தை வழியில் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : தீர்வுகள் ஏற்படும். சுவாதி : உதவிகள் கிடைக்கும். விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

விசாகம் : மேன்மை உண்டாகும். அனுஷம் : மாற்றமான நாள். கேட்டை : லாபகரமான நாள்.

உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் வியாபார பணிகளில் மேன்மைகளை உருவாக்குவீர்கள். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும். பூராடம் : சோர்வு நீங்கும். உத்திராடம் : மேன்மையான நாள்.

உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கடன் நிமித்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்

உத்திராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும். திருவோணம் : மகிழ்ச்சியான நாள். அவிட்டம் : ஈடுபாடு உண்டாகும்.

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வரவுகளிலிருந்து இழுபறியான சூழல் மறையும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் புதிய வாய்ப்புகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஆதாயம் உண்டாகும். சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும். பூரட்டாதி : செல்வாக்குகள் ஏற்படும்.

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். அரசுப் பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் காணப்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும். உத்திரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும். ரேவதி : அனுகூலம் உண்டாகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link