மார்கழி 17 புத்தாண்டு ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பொழுதுபோக்கு செயல்களால் தாமதம் உண்டாகும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும். பரணி : தாமதமான நாள். கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
உயர் அதிகாரிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பணியாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பான நாள். ரோகிணி : வேறுபாடுகள் நீங்கும். மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
அரசு சார்ந்த செயல்பாடுகளில் தாமதமான சூழல் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எந்த ஒரு செயலிலும் உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : தாமதமான நாள். திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும். புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு ஏற்படும். தந்தையிடம் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும். பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் யோகம் மூலம் மாற்றம் பிறக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : மேன்மை உண்டாகும். பூரம் : உதவிகள் கிடைக்கும். உத்திரம் : மாற்றம் பிறக்கும்.
ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழல் காணப்படும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த தெளிவுகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும். அஸ்தம் : இலக்குகள் பிறக்கும். சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உங்கள் மீதான சிறு சிறு வதந்திகள் மறையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடிவரும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும். சுவாதி : வதந்திகள் மறையும். விசாகம் : முயற்சிகள் கைகூடிவரும்.
பேச்சுக்களில் தெளிவுகள் பிறக்கும். அலுவல் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வரவுகளில் இருந்துவந்த தாமதம் மறையும். வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சாதகமான நாள். அனுஷம் : தன்னம்பிக்கை பிறக்கும். கேட்டை : வாய்ப்புகள் ஏற்படும்.
பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான சூழல் அமையும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் குறையும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மூலம் : சாதகமான நாள். பூராடம் : சோர்வுகள் குறையும். உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். பலவிதமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வெளி உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும் திருவோணம் : வாதங்களைத் தவிர்க்கவும். அவிட்டம் : அலைச்சல் உண்டாகும்.
ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் மிதமான லாபம் ஏற்படும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அவிட்டம் : லாபகரமான நாள். சதயம் : மதிப்பளித்து செயல்படவும். பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதளவில் பக்குவம் பிறக்கும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோக பணிகளில் சில சலுகைகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும். உத்திரட்டாதி : ஆர்வமின்மை குறையும். ரேவதி : உதவிகள் சாதகமாகும்.