இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்கள் வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள்

Wed, 29 Nov 2023-6:02 am,

மேஷம்: இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன் பிரச்சினைகள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

 

ரிஷபம்: இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

 

மிதுனம்: இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வருமானம் பெருகும்.

 

கடகம்: இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

 

சிம்மம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய தொகையை பிறரை நம்பி கடன் கொடுப்பதோ வாங்குவதோ தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

 

கன்னி: இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

 

துலாம்: இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

விருச்சிகம்: இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

 

தனுசு: இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

 

மகரம்: இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 

கும்பம்: இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

மீனம்: இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கடன்கள் குறையும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link