மாசு மருவில்லா அழகுக்கு தக்காளி பேக்! ஆனா காம்பினேஷன் தான் முக்கியம் அழகிகளே!
முகத்தின் நிறம் மட்டும் அழகை நிர்ணயிப்பதில்லை, சருமத்தின் தரம், நிறம், செழிப்பு என பல காரணிகள் அழகை நிர்ணயிக்கின்றன
முகத்தில் களை சொட்ட வேண்டுமென்றால், அதற்கு முதலில் தக்காளி ரசம் சொட்ட சொட்ட முகத்தை அழகுபடுத்த வேண்டும்
மாசு மருவில்லாத முகம் வேண்டுமானால் உங்கள் உணவில் மட்டுமல்ல, அழகுப் பொருளாகவும் தக்காளியை பயன்படுத்தலாம்
ஒரு தக்காளியை மசித்து, அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். இந்த பேஸ்ட்டை தடவுவதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் புத்துணர்ச்சி பெறும், சுருக்கங்கள் மறாஇயும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் முகத்தின் நிறத்தை அதிகரிக்க மெருகேற்றுகிறது. முகத்தில் சுமார் 15 நிமிடங்கள் தக்காளி பேஷியல் பேக் வைத்த பிறகு கழுவவும்.
தக்காளி சாறு மற்றும் எலுமிசை சாறுகளை கலந்து, முகத்தில் பூசி அது காய்ந்த பிறகு கழுவினால், சருமம் புத்துணர்ச்சி அடையும்
தக்காளி மற்றும் கடலைமாவு இரண்டும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவை இரண்டையும் கலந்து தடவினால் முகம் பளபளப்பாக மாறுவதுடன் அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் குணமாகும். முகத்தில் உள்ள பருக்களை போக்க, தக்காளியையும் கடலை மாவையும் கலந்து முகத்தில் பூசி,காயவிட்டு கழுவவும்
பக்கவிளைவில்லாத அழகுக்கு தக்காளியை கொண்டு வீட்டிலேயே முக பேக் செய்து அழகுக்கு அழகூட்டவும்