இந்த உணவு பொருட்களை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது!
தேன் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. அவற்றை ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கும் போது, படிகமாகி கெட்டியாகவும் தானியமாகவும் மாறும். இது போன்ற நேரத்தில் அவற்றை சாப்பிடுவது கடினமாகிவிடும்.
ஃப்ரிட்ஜில் பூண்டை வைக்கும் போது, அவை முளைத்து ரப்பராக மாற வாய்ப்புள்ளது. எனவே பூண்டை உலர்ந்த இடத்தில் வைப்பது நல்லது.
வெங்காயத்தை நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் போது, பூஞ்சை மற்றும் மிருதுவாக மாறும். இதனால் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே அவற்றை நல்ல காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பது நல்லது.
ஃப்ரிட்ஜில் தக்காளியை வைக்கும் போது அதன் தோல் மிருதுவாக மாறுகிறது. இதனால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். தக்காளியை அறை வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது.
உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அவற்றில் உள்ள மாவுச்சத்து, சர்க்கரைகளாக மாறி சுவை மற்றும் அவற்றின் தன்மை பாதிக்கிறது. எனவே ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
வாழைப்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. நீண்ட நேரம் அவை கூலிங்கில் இருந்தால் பழுப்பு நிறமாக மாறி அவற்றின் சுவை கெட்டுப்போகும். எனவே எப்போதும் அறை வெப்பநிலையில் சேமிப்பது நல்லது.