கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த டாப் 10 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Thu, 12 Oct 2023-10:37 am,

கௌதம் கம்பீர்: 

2019 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாக, முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர், பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தார். இப்போது எம்பியாக உள்ளார்

முகமது அசாருதீன்: 

2009 ஆம் ஆண்டில், காங்கிரஸில் சேர்ந்து அசாருதீன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 பொதுத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் அசார் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மன்சூர் அலி கான் பட்டோடி: 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடி அரசியலில் நுழைந்து பதவிக்கு வந்த முதல் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவரான இவர், இரண்டு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் இரண்டு முறையும் தோல்வியடைந்தார். இதனால் அரசியலில் இருந்து வெளியேறினார்

கீர்த்தி ஆசாத்: 

1983 உலகக் கோப்பை வென்ற அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கீர்த்தி ஆசாத். பீகாரில் உள்ள தர்பங்கா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றார். பிப்ரவரி 2019-ல் அவர் முறையாக காங்கிரஸில் நுழைந்தார். பீகார் முன்னாள் முதல்வர் பகவத் ஜா ஆசாத்தின் மகன் கீர்த்தி ஆசாத்.

 நவ்ஜோத் சிங் சித்து: 

பஞ்சாப் அரசில் அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து, 2004ல் பாஜக சார்பில் மக்களவைக்கு போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இந்தியாவுக்காக 51 டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சித்து, பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். 

முகமது கைஃப்: 

2000 மற்றும் 2006-க்கு இடையில், முகமது கைஃப் 125 ஒருநாள் மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். காங்கிரஸில் சேர்ந்த பிறகு, அவர் உத்தரபிரதேசத்தின் புல்பூரில் இருந்து 2014 மக்களவைத் தொகுதிக்கு போட்டியிட்டு வென்றார்.

வினோத் காம்ப்ளி: 

1000 டெஸ்ட் ரன்களை அதிவேகமாக எடுத்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. அவரது துணிச்சலான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். 1993-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் 227 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவர் லோக் பாரதி கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2009 விதானசபா தேர்தலில் விக்ரோலி (மும்பை) தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

மனோஜ் திவாரி: 

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். ஹூக்ளி மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கான கூட்டத்தில், திவாரி முறையாக டிஎம்சியில் இணைந்தார். 

ஹர்பஜன் சிங்: 

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், பஞ்சாபி மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். மார்ச் 2022-ல், அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 42 வயதான அவர் 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு டெஸ்ட் சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

சேத்தன் சவுகான்: 

சுனில் கவாஸ்கருடன் இந்திய அணிக்கு ஓப்பனிங் இறங்கிய சேத்தன் சௌஹான், உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1981-ல், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததால், அவர் அரசியலுக்கு வந்து பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். உத்தரபிரதேசத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link