இந்த வாரத்தின் டாப் 10 சீரியல்கள்! TRPயில் முதல் இடத்தை பெற்ற தொடர் எது?
சின்ன மருமகள்:
விறுவிறுப்பாக செல்லும் தொடர்களுள் ஒன்று, சின்ன மருமகள். இந்த தொடருக்கு, 5.73 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது, டாப் 10 தொடர்களில், 10ஆம் இடத்தில் இருக்கும் தொடர் இதுதான்.
மல்லி:
புதியதாக ஒளிபரப்பாகி வரும் மல்லி தொடர், இந்த வாரம் 6.92 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதனால் இதர்கு 9ஆம் இடம் கிடைத்திருக்கிறது.
சுந்தரி:
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற தொடர்களுள் ஒன்று, சுந்தரி. இந்த தொடரின் டிஆர்பி ரேட்டிங் 7.24 ஆக உள்ளது. இதனால் இதற்கு 8வது இடம் கிடைத்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
முதல் சீசன் வெற்றிகரமாக அமைய, அதே தொடரை 2வது சீசனாகவும் எடுத்திருக்கின்றனர். இந்த தொடர், குடும்ப பின்னணியை கொண்டதாக உருவாகி இருக்கிறது. இதற்கு இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் 7.30 கிடைத்துள்ளது. இத்தொடர், 7வது இடத்தை பிடித்திருக்கிறது.
வானத்தை போல:
2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தை போல. இந்த தொடர் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இது, 7.35 புள்ளிகளை பெற்று 6ஆம் இடத்தை பெற்றிருக்கிறது.
மருமகள்:
கேப்ரியல்லா நாயகியாக நடித்து வரும் தொடர், மருமகள். இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கிள் 8.05 புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் உள்ளது.
சிங்கப்பெண்ணே:
ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தை சொல்லும் தொடர், சிங்கப்பெண்ணே. இந்த தொடர் 8.07 புள்ளிகளை பெற்று டிஆர்பியில் 4வது இடத்தில் இருக்கிறது.
பாக்கியலக்ஷ்மி:
குடும்ப பெண்மணிகள் படும் சிரமங்களை கூறும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் தொடர், பாக்கியலக்ஷ்மி. இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கிள் 8.67 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் இருக்கிறது.
கயல்:
சைத்ரா ரெட்டி-சஞ்சீவ் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் தொடர், கயல். இந்த தொடர் 3 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இது, டிஆர்பி ரேட்டிங்கிள் 8.81 புள்ளிகளை பெற்று 2வது இடம் பெற்றிருக்கிறது.
சிறகடிக்க ஆசை:
டி.ஆர்.பி ரேட்டிங்கிள் 9.84 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற்றிருக்கும் தொடர், சிறகடிக்க ஆசை. இதில், கோமதி பிரியா, வெற்றி வசந்த் உள்ளிட்டோர் ஜோடியாக நடித்து வருகின்றனர். இளசுகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தொடராக இருக்கிறது, சிறகடிக்க ஆசை.