விரைவில் சந்தைக்கு வர உள்ள ‘5’ கார்கள்; குறைந்த விலை; அசத்தல் அம்சங்கள்..!!!

Sun, 31 Oct 2021-1:38 pm,

இந்த பட்டியலில் மாருதி செலிரியோவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. இது முதலில் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மாருதி நியூ ஜெனரேஷன், அதாவது புதிய தலைமுறைகான சூப்பார் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறை செலிரியோ நவம்பர் மூன்றாவது வாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். இது இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. ஒன்று 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் (67 PS, மற்றொன்று 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் (83 PS).

மாருதி நிறுவனம் பலேனோ காரின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். புதுப்பிக்கப்பட்ட மாடலில் மறுசீரமைக்கப்பட்ட முன் கிரில், புதிய பம்ப்பர்கள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள் போன்ற சில வெளிப்புற மாற்றங்கள் இருக்கும். உட்புறங்களில் மறுசீரமைக்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் புதிய மிதக்கும் வகை இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை போன்ற சில முக்கிய மாற்றங்களைக் காணலாம். தற்போதைய வேரியண்டில் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மாறாமல் இருக்கும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

 

Citroen C3 இந்தியாவில் 2022 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எங்கள் சந்தையில் அதன் நெருங்கிய போட்டியாளர்களாக Maruti Vitara Brezza, Kia Sonnet, Nissan Magnite போன்ற எஸ்யூவிகளாக இருக்கும். Citroen கார் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃப்ளெக்ஸ்-எரிபொருள் (எத்தனால் கலவை) ஆப்ஷனுடன் மேனுவர் மற்றும் ஆடோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.

மாருதி இந்தியாவில் அதன் CNG இயக்கப்படும் பயணிகள் கார் வரம்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது, அந்த வகையில், ஸ்விஃப்ட் CNG (DZire CNG உடன்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விஃப்ட் சிஎன்ஜி 1.2 லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படும், இது பெட்ரோலில் இயங்கும் போது 83 பிஎஸ் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் போது 72 பிஎஸ் ஆற்றலுடன் இயங்கும். மாருதியின் மற்ற சிஎன்ஜி கார்களைப் போலவே, சிஎன்ஜி மாறும் ஆப்ஷனுடன், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் கிடைக்கும்.

டாடா மோட்டார்ஸ் நீண்ட காலமாக தனது வாகனங்களுக்கான சிஎன்ஜி பவர் ட்ரெயின்களை உருவாக்கி வருகிறது. டியாகோ சிஎன்ஜி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து டிகோர் சிஎன்ஜியும் விற்பனைக்கு வரும். சிஎன்ஜி பவர்டிரெயினில் நிலையான டியாகோவில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருக்கும், ஆனால் தொழிற்சாலை பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் இருக்கும். டியாகோ சிஎன்ஜியில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம், ஏஎம்டி ஆப்ஷன் பெட்ரோல் மாறுபாட்டிற்கு மட்டுமே.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link