விவாகரத்துக்கான 5 முக்கிய காரணங்கள்..!

Thu, 08 Aug 2024-10:43 pm,

நெருக்கம் - 

மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகளுக்கு ஆரம்பத்தில் சில புரிதல் பிரச்சனைகள் வரும். இயல்பாகவே சின்ன சின்ன விஷயங்களுக்காக வரும் இந்த பிரச்சனைகள் பெரிய மனக்கஷ்டத்தை கொடுத்துவிடும். இதனால் விவாகரத்து சிந்தனை வர வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால், மனதளவிலான நெருக்கம் சீக்கிரம் ஏற்பட்டுவிடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் வரும் இப்பிரச்சனையை தீர்க்க சில காலங்கள் ஆகும். முடிந்தளவுக்கு அமைதி, நிதானம், விஷயங்களை பரிமாறிக்கொள்ளுதல் போன்ற அடிப்படையான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

 

கடந்த கால மோதல்கள் -

மண வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நெருக்கம் ஏற்படாதபோது சில விஷயங்களில் தம்பதிகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். இதுதவிர ஒருசில முடிவுகள் எடுத்ததிலும் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். 

அதனை பேசி தீர்க்காதபோது இருவருக்குள்ளும் இருக்கும் முரண்பாடு பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும். பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை தவிர்த்துகொண்டே வரும்போது விவகாரத்தை நோக்கி தள்ளும். அதனால் சின்ன சின்ன பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்வது நல்லதல்ல.  

மரியாதை - 

கணவன் மனைவி இருவருக்கும் மரியாதை என்பது முக்கியம். தனிப்பட்ட முறையில் இருவரும் எப்படி இருந்து கொண்டாலும் பொதுவெளியில் பேசும்போது ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். இந்த இடத்தில் செய்யும் தவறு உடனடியாக இருவருக்கு இடையிலான உறவை பாதிக்கும். 

அது மண வாழ்க்கையில் பாதிப்பை உருவாக்கும். ஒருசில முறை என்றால் பொறுத்துக் கொள்ளப்படும். ஆனால் தொடர்ந்தால் கணவன், மனைவி யாராக இருந்தாலும் விவாகரத்தைப் பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். எல்லோருக்கும் சுயகவுரம் என்று ஒன்று உள்ளது. 

உணர்ச்சி சிக்கல்கள் -

மண வாழ்க்கையில் வரக்கூடிய முக்கிய பிரச்சனையே உணர்ச்சி சிக்கல்கள் தான். யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளாதவரை இந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். முழுமையாக தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டும்போது விமர்சனங்கள் எழும். இதனால் எழும் கடினமான சூழல்களை சமாளிக்க முடியவில்லை என்றால் விவாகரத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

வாழ்க்கை மாற்றம் -

வாழ்க்கை மாற்ற சிக்கல்கள் பொதுவாக பெண்களிடத்தில் தான் இருக்கும். ஏனென்றால் தாய் தந்தையுடன் இருக்கும் அவர்கள் புதியதாக கணவன் வீட்டிற்கு வரும்போது வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும். இங்கிருப்பவர்களின் வாழ்க்கை சூழலுடன் தன்னை பொருத்திக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். அப்போது கணவனின் ஆதரவு மனைவிக்கு தேவைப்படும். அந்த ஆதரவு இல்லையென்றால் மண வாழ்க்கையில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க தயங்கவே மாட்டர்கள் பெண்கள்.

இத்தகைய விஷயங்களை கருத்தில் கொண்டு தம்பதிகளாக இருக்கும் ஆண்களும் பெண்களும் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link