இந்த விஷயங்கள மனைவிகிட்ட சொல்லாம சீக்ரெட்டா இருந்தா வாழ்க்கைல நிம்மதி! இல்லைன்னா???
குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். அதற்கு மனைவியிடம் கணவன் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னவென்று தெரியுமா?
திருமணம் முடிந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும், மனைவியிடம் குறைகூரும்போது கணவன் சற்று யோசித்து சொல்வது நல்லது. எப்போதும் நம்முடன் இருப்பவர் தானே என்ற எண்ணத்தில், கண்டபடி பேசிவிடக்கூடாது. நமது மனோநிலையையே மனைவியும் பிரதிபலித்தால் என்ன ஆகும்? என்பதை யோசித்து குறையாக இருந்தாலும் அதை சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்
நம்முடைய பலவீனத்தை யாரிடமும் நாம் பகிரக்கூடாது என்று சொன்னாலும் நமது மனைவியிடம் சொல்லலாம் என்று கணவன் நினைப்பதில் தவறில்லை. என்னதான் மனைவியாகவே இருந்தாலும் நம்முடைய பலவீனத்தை அவர்களிடம் பகிர்ந்துவிட்டால், அவர்கள் அதை மனதில் வைத்துக் கொண்டு தான் தன்னைத் திட்டுகிறாரோ என்று உங்களுக்கு கோபம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். எனவே உங்கள் பலவீனத்தை மறைக்கவோ சொல்லவோ முயற்சிப்பதோடு, அதை விட்டு விலகவும் முயற்சிக்கவும்.
அவமானங்கள் தான் ஒருவரின் வாழ்வில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல உத்வேகமாக இருக்கும். ஆனால், மனைவிக்கு தனது அவமானம் தெரிந்துவிட்டால், கணவன் மனைவிக்கு மத்தியில் ஏதாவது பிரச்சனை வரும்போது, மனைவி அந்த அவமானத்தை சொல்லிக் காட்டி மேலும் அவமானப்படுத்தலாம். இது வேறுவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்
கணவன் வருமானம் தொடர்பான அனைத்து தகவல்களையும் மனைவியிடம் பகிராமல் இருப்பது பர்சுக்கு நல்லது. வருமானத்திற்கு ஏற்ப செலவுக்கு திட்டமிட்டுவிட்டால், ஆண்களின் கையில் பண வரத்தே இல்லாமல் பொய்விடும். எனவே உங்கள் வருமானம் சார்ந்த முழு உண்மையை மனைவியிடம் பகிர வேண்டாம்.
பிறருக்கு உதவும் தகவல்கள் எப்போதும் ரகசியமாக இருக்க வேண்டும். ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள். அது மனைவிக்கும் பொருந்தும். ஆனால், தனக்கு பிறகு தான் தானம் என்பதையும் மறந்துவிடாதீர்கள். செய்த தர்மத்தை யாரும் சொல்லிக் காட்டும் நிலையை உருவாக்கவேண்டாம்
சேமிக்கும் பணம் சார்ந்த ரகசியங்களையும் ஒருபோதும் சொல்லக்கூடாது. உங்கள் சேமிப்பு ரகசியம் உங்கள் மனைவிக்குத் தெரிந்தால், ஏதோ ஒரு தருணத்தில் அதை செலவு செய்வதற்கு அவர்கள் பயன்படுத்த முயற்சிக்கலாம். அல்லது நீங்கள் திடீரென செலவு செய்யும்போது கேள்வி கேட்டு உங்களை துன்புறுத்தலாம். இது அதிக பணச்செலவை உங்களுக்கு ஏற்படுத்திவிடும்.