ஆண்கள் காதலிக்கு துரோகம் செய்வது ஏன்? நம்ப முடியாத 8 காரணங்கள்!!
சமூக அழுத்தம்:
மனிதர்கள் எப்போதும் தங்களை சுற்றி உலகம் எப்படி இருக்கிறதோ, அதை பார்த்து, அப்படித்தான் நடந்து கொள்வர். ஒருவர் தனது காதலி அல்லது மனைவிக்கு துரோகம் செய்கிறார் என்றால், அவரை சுற்றி இருப்பவர்கள், துரோகம் செய்வதை சாதாரணமாக்கி வைத்திருப்பர்.
பழிவாங்குதல்:
ஒரு சிலர், தங்கள் பார்ட்னர் ஏதேனும் தவறு செய்து விட்டால் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பினை ஏற்படுத்தி கொள்வராம்.
தவறான புரிதல்கள்:
சீட்டிங் செய்யும் பலர், தாங்கள் என்ன உணர்கிறோம் என்பதையோ, தங்களுக்குள் அழுத்தம் கொடுக்கும் விஷயங்களையோ வெளியில் கூற தெரியாதவர்களாக இருப்பர். இதனால், அவர்களுக்கு தங்கள் பார்ட்னர் மீது தவறான புரிதல் ஏற்பட்டு, அது துரோகத்திற்கு வழிவகுக்கலாம்.
தனிப்பட்ட பிரச்சனை:
ஒரு சிலருக்கு மன ரீதியாக சில பிரச்சனை இருக்கும். தன் மீதான குறைவான மறியாதை, முன்னர் ஏற்பட்ட மன வலிகள் ஆகியவற்றால் ஏதேனும் தீரா உணர்வுடன் உலா வருவர். இது போன்றோர் தங்கள் பார்ட்னருக்கு துரோகம் செய்ய வாய்ப்புள்ளது.
வாய்ப்பு:
பலருக்கு, தொடர்ந்து துரோகம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துக்கொண்டே இருக்கலாம். இதை ஒரு நேரம் இல்லை என்றாலும் இன்னொரு நேரம் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆழமான உறவில் இல்லாதது:
ஒரு ஆண், தான் இருக்கும் காதல் உறவில் ஆழமாக இல்லை என்றாலோ, தான் காதலிக்கும் பெண் மீது பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை என்றாலோ வேறு பெண்ணை நோக்கி ஓடுவான்.
புதுமை:
சில ஆண்கள் புதுமை மற்றும் உற்சாகத்திற்காக தங்கள் பார்ட்னரை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கலாம். இதனால் அவர்களின் தற்போதைய உறவுக்கு வெளியே புதிய அனுபவங்களைத் தேடலாம்.
உணர்ச்சி இணைப்பு இல்லாமை:
ஒரு மனிதன் தனது பார்ட்னரிடம் உணர்ச்சி ரீதியாக ஒட்டுதல் இல்லாமல் உணர்ந்தால், அவன் வேறு இடத்தில் உடல் அல்லது மன ரீதியான நெருக்கத்தைத் தேடலாம்.