ஸ்ரீசாந்த் முதல் சாமி வரை: சிறையில் கம்பி எண்ணிய பிரபல கிரிக்கெட்டர்கள் இவர்கள்தான்!!

Tue, 28 Dec 2021-6:47 pm,

சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மற்ற இரண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களான அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சவானுடன், 2013 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீசாந்துக்கு ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதற்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர் தொழில்முறை கிரிக்கெட்டில் இனி விளையாட முடியும். (Source: Twitter)

2017 செப்டம்பர் 25 அன்று அதிகாலையில் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டார். ஒரு சர்வதேச போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடுவதற்காக, அதற்கு முந்தைய இரவு அவர் இங்கிலாந்து அணி வீரர்களுடன் வெளியே சென்றார். தற்போது ஸ்டோக்ஸ் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நிவாரணம் பெற்றுள்ளார்.  (Source: Twitter)

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹசின் ஷமி மீது வன்முறை மற்றும் மேட்ச் பிக்சிங் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிசிசிஐ-யிடமிருந்து அவருக்கு நிவாரணம் கிடைத்தாலும், ஹசின் ஜஹானின் புகாரின் அடிப்படையில் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். (Source: Twitter) 

ஆஸ்திரேலியாவின் சவுத் பெர்த், ஸ்கார்பரோ மற்றும் உட்லண்ட்ஸ் பகுதிகளில் கோல்ஃப் கிளப்சுகள், ஆடைகள் மற்றும் நகைகளை திருடியதாக முன்னாள் ஆஸ்திரேலியா மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் லூக் போமர்ஸ்பேக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், மெத்திலம்பெட்டமைன் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. (Source: Twitter) 

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ரூபெல் ஹொசைன், நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 19 வயதான நஸ்னின் அக்டர் ஹேப்பி, அவருக்கு எதிராக 'கற்பழிப்பு' மற்றும் 'திருமணத்திற்கான பொய்யான வாக்குறுதி' ஆகிய புகார்களை அளித்ததை அடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் இந்த உத்தரவை வழங்கினார். (Source: Twitter) 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link