கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோ

Sat, 07 Dec 2024-4:18 pm,

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதால், நரம்புகளில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும். இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைகிறது. மேலும் இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்து, இதய ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

வாழைப்பழம்: வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு சத்தான பழமாக உள்ளது. இதில் பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் இருக்கின்றது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது. நார்ச்சத்து அதிகமாக உள்ள வாழைப்பழம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

அவகாடோ: இதில் Beta-Sitosterol அதிகம் இருக்கிறது. மேலும், இதில் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. இது கொலஸ்ட்ராலை கரைக்க உதவும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் வேலையையும் இது செய்கின்றது. 

அன்னாசிப்பழம்: என்சைங்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ள அன்னாசிப்பழம் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் அன்னாசிப்பழம் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு போதுமான சக்தியை அளிக்கின்றது.

எலுமிச்சை: ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், பெட்டின்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பலவித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இவை தமனிகளை சுத்தம் செய்து கொழுப்பின் அளவை குறைக்கின்றன. தினசரி உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்வது உடலுக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பையும் விரைவாக குறைக்கும்.

இந்த பழங்களுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை ஆகியவை அவசியம். உடல் செயல்பாடுகள், போதுமான தூக்கம், தண்ணீர், உடற்பயிற்சி ஆகியவையும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link