டாப் 8 இந்திய பிரபலங்களின் திருமண போட்டோஸ்.. காதல் புறாக்களின் அழகிய தருணம்!

Mon, 16 Dec 2024-1:03 pm,

டிசம்பர் 12 அன்று தென்னிந்தியப் பிரபலமான கீர்த்தி சுரேஷ் தன் 15 வருடக் காதலனான ஆண்டனி தட்டில் கோவாவில் கரம் பிடித்தார். 

மலையாள பிரபலமான ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தரணி இருவருக்கும் அவர்களின் மலையாள மண்ணில் திருமண கலாச்சார முறைப்படி சிறப்பாகத் திருமணம் நடந்து முடிந்தது.

அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் அமைதியான முறையில் அழகாக தன் குறுகிய குடும்ப வட்டாரத்துடன் இணைந்து சிம்ளாக திருமண விருந்து வைத்தனர். மிகவும் பழமையான வானாபார்தி கோவில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ளன. அக்கோவிலில் தன் குடும்பத்துடன் சென்று பாரம்பரிய முறையில் சிறப்பாகத் திருமணம் நடந்துமுடிந்தது. 

அம்பானி வீட்டுக் கடைசி திருமண விருந்து தடபுடலான விருந்தாக இருக்கனுமாச்சே... ஒட்டுமொத்த உலகமே அம்பானி கல்யாணத்தில் ஆஜாராகிவிட்டனர். திருமணமா அல்லது திருவிழா என்று உலகமே அசந்து விட்டனர். ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானி திருமணம் வெகு சிறப்பாக ஜூலை 12 அன்று நடந்தது. 

 

நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருக்கும் அவர்களின் திருமண பாரம்பரிய முறையில் டிசம்பர் 4 அன்று இந்த திருமண ஜோடி புறாக்கள் ஒன்று சேர்ந்தது.

தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த பிரபல நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜாக்கி  பாக்னானியை பிப்ரவரி 21யில் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

 

அமீர் காண் மகளான இரா காண் தனது நீண்ட நாள் காதலை ஜனவரி 3யில் கரம் பிடித்தார். இதில் பிரபல பாலிவுட் வட்டாரங்கள் பங்கேற்று திருமணத்தைச் சிறப்பான முறையில் கொண்டு சேர்த்தனர். 

தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மாசாகக் கெத்து காட்டிய  நடிகை டாப்ஸி பண்ணு திருமணம் கொஞ்சம் வித்தியாசமாகவே  நடந்துமுடிந்தது. 2024 இந்த ஆண்டு மார்ச் 23யில் உதய்பூரில் அழகான அமைதி நிறைந்த இடத்தில் இந்த ஜோடி புறா காதல் மலர்ந்தது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link