அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 5 விளையாட்டு நட்சத்திரங்கள்

Wed, 16 Feb 2022-8:08 am,

போர்ச்சுகல் கேப்டனும் மான்செஸ்டர் யுனைடெட் ஸ்ட்ரைக்கருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக ஊடக தளமான Instagram இல் அதிகம் பின்தொடரப்படும் நபர். சமீபத்தில், பிரபலமான சமூக ஊடக இன்ஸ்டாகிராம் செயலியில் 400 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் நபர் ஆம மாறினார் ரொனால்டோ. 

ஐந்து முறை Ballon d'Or பட்டத்தை வென்ற ரொனால்டோ, தான் பயிற்சி செய்யும் படங்கள், குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தான் ஒப்பந்தத்தில் இருக்கும் பல்வேறு பிராண்டுகள் தொடர்பான இடுகைகளை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இடுகிறார்.

இந்தப் பட்டியலில் ரொனால்டோவின் பரம எதிரியான லியோனல் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார். 34 வயதான சூப்பர் ஸ்டார் அர்ஜென்டினா ஸ்ட்ரைக்கருக்கு தற்போது 305 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர், அவர் வழக்கமான இடுகைகள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறா

 இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர். 180 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் பத்து இடங்களில் உள்ள ஒரே இந்தியர் விராட் கோலி மட்டுமே. இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கு கோலி, இன்ஸ்டா பிரபல இந்தியர்.

கோஹ்லிக்கு அடுத்தபடியாக பிரேசில் வீரர் நெய்மர் நான்காவது இடத்தில் உள்ளார். பாரிஸ்-செயின்ட் ஜெர்மைன் ஸ்ட்ரைக்கரை 170 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். அவரது இடுகைகள் மிகவும் நகைச்சுவையானவை மற்றும் பிராண்ட் ஒப்புதல்கள், வேடிக்கையான ஆடைகள், பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அமர்வுகள் என நெய்மரின் பதிவுகள் கலக்கலாக இருக்கும்.

இன்ஸ்டாகிராமில் @kingjames என அழைக்கப்படும் NBA சூப்பர்ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்துள்ளார். 37 வயதான லெப்ரான் ஜேம்ஸ், சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் 110 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.   (புகைப்படம்: AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link