Hyundai Venue: 11 விதமான VENUE ரக கார்களை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்
ஹூண்டாய் வென்யூ முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சப்-4 காம்பாக்ட் SUV அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே பல மாறுதல்களை செய்துள்ளது. இப்போது ஹூண்டாய் நிறுவனம் வென்யூவின் ஃபேஸ்லிஃப்டை இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர்களில் மாற்றியமைத்துள்ளது.
ஹூண்டாய் வென்யூ ரூ.7,53,100 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் மூன்று பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் வெளியிடப்படும். 1 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட வேரியண்ட் ரூ.9,99,900 விலையில் தொடங்குகிறது. டீசல் மாறுபாட்டின் விலையும் ரூ.9,99,900 முதல் தொடங்குகிறது.
ஹூண்டாய் வென்யூ 2022 இல் மொத்தம் 11 வேரியண்ட்கள் உள்ளன. வென்யூவின் டாப் வேரியண்ட் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்கான விலை ரூ.12.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் டாப் மாடலின் விலை ரூ.12.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் டாப் வேரியண்ட் ரூ.10.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் வென்யூ 2022 இல் மொத்தம் 11 வகைகள் உள்ளன.
ஏழு வண்ணங்களில் ஹூண்டாய் வென்யூ வெளியிடப்பட்டுள்ளது டைஃபூன் சில்வர், டைட்டன் கிரே, டெனிம் ப்ளூ, பாண்டம் பிளாக், போலார் ஒயிட், ஃபியரி ரெட் மற்றும் ஃபீரி ரெட் வித் பாண்டம் பிளாக் ரூஃப் என பல நிற்அங்களில் கிடைக்கிறது வென்யூ
ஹூண்டாய் வென்யூவில் டூயல் டோன் இன்டீரியரை வழங்கியுள்ளது. நிறுவனம் காரில் கருப்பு மற்றும் சாம்பல் நிற டோன்களை பயன்படுத்தி லேயர்கள் உள்ளன.