த்ரிஷா நடிப்பில் வெளியான IDENTITY திரைப்படம் திரையரங்கில் மாசான வரவேற்பு!
IDENTITY திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது மற்றும் ரசிகர்களிடமிருந்தும் இப்படத்திற்கான விமர்சன கருத்துக்கள் நல்லவகையில் பெற்றுள்ளது.
IDENTITY திரைப்படத்தின் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு அனைத்தும் அனல் பறக்கும் வேட்டையாக நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் மூலம் இப்படம் அற்புதமான தயாரிப்புடன் வெளியானது.
IDENTITY திரைப்படத்தில் நடித்த தென்னிந்திய குயீன் த்ரிஷா நடிக்கும் முதல் மலையாளத் திரைப்படம் இதுவே.
இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய வேடத்தில் மாஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
IDENTITY திரைப்படத்தை அகில இந்திய விநியோக உரிமையைக் கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது. மேலும் ட்ரீம் பிக் பிலிம்ஸ் பேனரின் கீழ் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. GCC விநியோக உரிமையை ஃபார்ஸ் பிலிம்ஸ் பெற்றுள்ளது.
அகில் பால் மற்றும் அனஸ் கான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு, அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு மற்றும் சமன் சாக்கோவின் படத்தொகுப்பு செய்ய ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.